குளோபல் யூனிவர்சிற்றி உலகின் பிரதானமான தொலைதூர இறையியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும் (இந்தியா காலேஜ் ஆப் மினிஸ்ட்ரி ICoM). இந்தியாவில் தேவ ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக கடவுளால் பயன்படுத்தப்பட விரும்பும் ஆர்வமுள்ள கிறிஸ்தவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள பாடதிட்டமாகும். இந்த திட்டமானது, இரண்டு நிலையிலான படிப்புகளை (C.Th மற்றும் Dip.Th) வழங்குகிறது. வேதத்தை கற்றுக்கொள்ளவும், ஊழியம் செய்யவும் ஆர்வமுள்ள விசுவாசிகள் அனைவரும், தங்கள் தங்கள் சபைகளிலும், வீடுகளிலிமிருந்தே பயிற்சி பெறும் வசதியை குறைந்த கட்டணத்தில் ஏற்படுத்தி கொடுத்து செயல்படுகிறது. உங்கள் வாழ்க்கையிலும், வேலைக்காகவும் நீங்கள் கடவுளுடைய திட்டத்தை செயல்படுத்த முனைகையில் உதவுவதற்கு என்றே இத்திட்டம் உள்ளது.
எப்படி பதிவு செய்வது?
உங்கள் அருகாமையிலுள்ள அசெம்பிளிஸ் ஆப் காட் சபையை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் விபரங்களுக்கு globaluniversityindia.com என்ற வலைதளத்தை பார்வையிடவும்.
- வலைத்தளத்திலிருந்து விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் - admissions@guindia.com
- கூடுதல் உதவி அல்லது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் உள்ளூர் A. G. சபை போதகரை சந்திக்கலாம்.
- admissions@guindia.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது
தொலைபேசி:
0452- 2389124, 9445584405 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.
உங்கள் சபைகளை பெருக செய்தல்
உங்கள் சபையானது, உங்கள் நகரத்தையும் தேசத்தையும் அடைவதற்கு தேவனின் முக்கிய கருவியாகும். உங்கள் சபை வளரவும், புதிய சபைகளை உருவாக்கவும் அவர் விரும்புகிறார். இது எப்படி நடக்கும்?
இந்தியாவில் அசெம்பிளீஸ் ஆப் காட் சபை, 2020 க்குள் 25,000 புதிய சபைகளை நிறுவ வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு செயல்படுகிறது. இந்த இலக்கை அடைவதற்கு வீட்டு சபைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவை. ஆதித்திருச்சபையை போலவே, ஸ்தல சபை விசுவாசிகளும், தங்கள் நண்பர்களுக்கும் அயலவருக்கும் சுவிஷேசம் சென்றடைய ஊழியம் செய்ய வேண்டும்.
உங்கள் சபையில் உள்ள ஒவ்வொரு வீடும் சபையாக மாறுவதற்கு சாத்தியம் உள்ளது. இருப்பினும், பரிசுத்த ஆவியின் வல்லமையில் கடவுளுடைய வார்த்தையையும் ஊழியத்தையும் கற்பிக்கக்கூடிய பயிற்றுவிக்கப்பட்ட தலைவர் தேவை. குளோபல் யூனிவர்சிட்டி இந்தியாவில் அசெம்பிளீஸ் ஆப் காட் சபையுடன் இணைந்து இந்தியா காலேஜ் ஆப் மினிஸ்ட்ரி (ICoM) என்று அழைக்கப்படும் வீட்டு சபை போதக பயிற்சி திட்டத்தை வழங்குகிறது.